follow the truth

follow the truth

May, 19, 2024
HomeTOP1'மன்னா ரமேஷ்' நாட்டுக்கு

‘மன்னா ரமேஷ்’ நாட்டுக்கு

Published on

துபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவனாகக் கருதப்படும் ‘மன்னா ரமேஷ்’ எனப்படும் ரமேஷ் பிரியஜனக நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட பொலிஸ் குழுவொன்று சந்தேக நபரை இன்று (07) காலை டுபாயில் இருந்து நாட்டுக்கு அழைத்து வந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

சர்வதேச பொலிஸாரால் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த மன்னா ரமேஷ் அண்மையில் துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கொலை, போதைப்பொருள் கடத்தல், கப்பம் பெறுதல் உள்ளிட்ட பல குற்றங்கள் மன்னா ரமேஷ் மீது சுமத்தப்பட்டுள்ளது.

அவிசாவளை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர்களிடம் கப்பம் பெறும் சம்பவங்கள் தொடர்பில் சந்தேகநபருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அண்மைக்காலமாக சில கொலைகள் இவரின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LATEST NEWS

MORE ARTICLES

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...

சஜித் – அநுர விவாதம் நடைபெறும் திகதி தொடர்பிலான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள்...

எல்ல – வெல்லவாய வீதியை கண்காணிக்க விசேட குழு

எல்ல - வெல்லவாய வீதியின் மலித்தகொல்ல பகுதிக்கு மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளை கண்காணிப்பதற்காக தேசிய கட்டிட ஆராய்ச்சி...