follow the truth

follow the truth

May, 19, 2024
HomeTOP1பொஹட்டுவ உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் அனைவருக்கும் அழைப்பு

பொஹட்டுவ உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் அனைவருக்கும் அழைப்பு

Published on

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அமைப்பாளர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இது தொடர்பான அழைப்பை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்கள் முற்பகல் 10.45 மணியளவில் நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் அரசியல் நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் நோக்கம் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளது.

ஜனாதிபதிக்கும் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் தற்போதைய அரசியல் நிலமைகள் தொடர்பில் கடந்த சனிக்கிழமை பிற்பகல் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது.

LATEST NEWS

MORE ARTICLES

டயானாவுக்கு எதிரான குற்றச் செயல்கள் – சட்டமா அதிபர் விடுத்துள்ள பணிப்புரை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்து அவருக்கு எதிராக குற்றவியல்...

சொகுசு வாகன உதிரிபாகங்கள் சட்டவிரோதமான முறையில் பதிவு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகன பதிவு மென்பொருளின் பிரதியை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர்...

எலோன் மஸ்க் – ஜனாதிபதி சந்திப்பு

இந்தோனேஷியாவின் பாலி நகரில் இடம்பெறும் உலக நீர் மாநாட்டின் உயர்மட்ட கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எலோன் மஸ்க்கை...