நத்தார் பண்டிகை காலத்தில் நாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்
மேலும், தற்போது கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு பார்க்கும்போது எதிர்காலத்திலும் நாடு முடக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லையெனவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.