follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉலகம்காஸாவில் பாதுகாப்பான இடம் என்று எதுவும் கிடையாது

காஸாவில் பாதுகாப்பான இடம் என்று எதுவும் கிடையாது

Published on

ரஃபாவில் உள்ள பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், காஸாவில் பாதுகாப்பான இடம் என எதுவும் கிடையாது என ஐநா தெரிவித்திருக்கிறது.

காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் ஐ நா பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். எனவே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின. இதுவரை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

இதற்கிடையில் போர் நிறுத்தம் கோரி ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பலஸ்தீன ஆதரவு நாடுகள் கொண்டு வரும் தீர்மானங்களை, அமெரிக்காவும், பிரிட்டனும் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இரத்து செய்து வருகிறது. எனவே இந்த போர் மத்திய கிழக்கு முழுவதும் பரவும் அபாயம் எழுந்திருக்கிறது.

மறுபுறம் இந்த போரை எதிர்த்தும், போரில் இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்காவின் நிலைப்பாட்டை எதிர்த்தும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் சூடுபிடித்துள்ளன. அமெரிக்காவில் மட்டும் 50க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராடும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை அந்நாட்டு காவல்துறை கைது செய்து வருகிறது. தற்போது வரை 900க்கும் அதிகமானோர் கைதாகியுள்ளனர்.

மாணவர் போராட்டம் லண்டன், பாரிஸ் என ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. ‘சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால்’ (ICC) போர் குற்றத்திற்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விரைவில் கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படி இருக்கையில் எகிப்துக்கும், பலஸ்தீனத்திற்கும் இடையே இருக்கும் எல்லை பகுதியான ரஃபாவில் லட்சக்கணக்கான பலஸ்தீன மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். காஸா உள்ளே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால், பலஸ்தீன மக்கள் ரஃபா நோக்கிதான் நகர்ந்தனர். இந்த பகுதியில் இஸ்ரேல் தாக்குதலை தற்போது தொடங்கியுள்ளது.

இந்நிலையில், “காஸாவில் பாதுகாப்பான இடம் என சில இடங்கள் சொல்லப்படுகிறது. ஆனால், இதில் உண்மை கிடையாது. மக்களை திசை திருப்பவே சில தகவல்கள் பரப்பப்படுகின்றன. காஸாவில் எந்த இடமும் பாதுகாப்பானது கிடையாது” என பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. ஏஜென்சியின் (UNRWA) ஆணையர் ஜெனரல் கவலையுடன் கூறியுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

பிரான்சின் அதிவேக ரயில் பாதைகள் பல தீக்கிரை

2024 ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, பிரான்சில் பல ரயில் பாதைகள் தீ...

போரை நிறுத்த இதுதான் தருணம் என்றும் நெதன்யாகுவிடம் வலியுறுத்திய கமலா ஹாரிஸ்

பலஸ்தீனம் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று அமெரிக்கவுக்கு பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி ஜோ...

ஹமாஸ் தலைவர் முஸ்தபா முஹம்மது அபு அரா மரணம்

பலஸ்தீன மேற்குக் கரையில் ஹமாஸ் அமைப்பின் தலைவராகப் பணியாற்றிய முஸ்தபா முஹம்மது அபு அரா மரணமடைந்தார். இஸ்ரேல் இராணுவ மருத்துவமனையில்...