follow the truth

follow the truth

May, 13, 2025
HomeTOP1யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த தயார் - ஜனாதிபதி

யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த தயார் – ஜனாதிபதி

Published on

பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ள எவருடனும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (16) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் குழுவுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்;

“.. தற்போதைய அரசாங்கம் மூன்று பணிகளை நிறைவேற்றியுள்ளது நீதியை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக சட்டத்தின் ஆட்சியை நாம் பலப்படுத்தியுள்ளோம்.

ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான சட்டங்களையும் நாங்கள் நடைமுறைப்படுத்தியுள்ளோம், ஊழலுக்கு எதிரான சட்டங்களையும் அமுல்படுத்தியுள்ளோம். இந்த கடினமான பணிகளை வெற்றிகரமாக செயல்படுத்த அனைவரின் ஆதரவையும் நான் எதிர்பார்க்கிறேன்.”

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவீர்களா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, சமூகத்தில் நிலவும் கேள்வியை அப்படியே இருக்க விடுவதாகத் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர்...

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...

அலதெனிய பஸ் விபத்தில் 37 பேர் வைத்தியசாலையில்

கண்டி, அலதெனிய பகுதியில் நேற்றிரவு(12) தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்து...