follow the truth

follow the truth

December, 14, 2024
HomeTOP1பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் - சிவப்பு எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் – சிவப்பு எச்சரிக்கை

Published on

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் செயற்படும் மீனவ மற்றும் கடல்சார் சமூகத்தினர் மிகவும் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிக்கின்றது.

நாளை (25) அதிகாலை 5.30 மணிக்கு தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து மத்திய வங்கக்கடலில் புயலாக உருவாகலாம்.

அது பின்னர் வடக்கு நோக்கி நகர்ந்து நாளை இரவு 11.30 மணியளவில் புயலாக மாறும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் மிகவும் பலத்த காற்று மற்றும் பலத்த மழை பெய்யும்.

இதேவேளை, கடற்பரப்புகளும் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

​​இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் வண்டுகள் – மீள் ஏற்றுமதி செய்ய உத்தரவு

இறக்குமதி செய்யப்பட்ட 3 கொள்கலன்களில் இருந்த பாவனைக்கு பொருத்தமற்ற 75,000 கிலோ அரிசியை மீள் ஏற்றுமதி செய்யுமாறு சுங்கத்...

இதுவரை 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 46,934 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்...

இந்திய ரயில் எஞ்சின்களை தூர ரயில் சேவைகளுக்காக பயன்படுத்த திட்டம்

இந்தியாவிடமிருந்து நன்கொடையாக கிடைக்கவுள்ள எஞ்சின்களை தூர ரயில் சேவைகளுக்கும், பொருட்கள் கொண்டு செல்லும் ரயில்களுக்கும் பயன்படுத்த முடியுமென இலங்கை...