follow the truth

follow the truth

December, 14, 2024
Homeவிளையாட்டுமுதல் பயிற்சி ஆட்டத்தில் நெதர்லாந்து அணிக்கு வெற்றி

முதல் பயிற்சி ஆட்டத்தில் நெதர்லாந்து அணிக்கு வெற்றி

Published on

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்திற்காக நடைபெற்ற முதல் பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி நெதர்லாந்து அணியிடம் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி நெதர்லாந்து அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது.

அதன்படி களம் இறங்கிய நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 181 ஓட்டங்களை எடுத்தது.

தில்ஷான் மதுஷங்க 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதல் சுற்றில் நெதர்லாந்துக்கு எதிராக இலங்கைக்கு போட்டி உள்ளதால், இலங்கை அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களான வனிந்து ஹசரங்க, மதிஷ பத்திரன, மஹிஷ் தீக்ஷன ஆகியோர் பந்து வீசவில்லை.

182 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணியால் 18 ஓவர்கள் 5 பந்துகளில் 161 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இலங்கையின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தோல்வியடைந்தபோது வனிந்து ஹசரங்க 15 பந்துகளில் 35 ஓட்டங்கள் எடுக்க முடிந்தது.

தசுன் ஷானக 20 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 31 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணி பங்கேற்கும் இரண்டாவது பயிற்சி ஆட்டம் மே 31ம் திகதி அயர்லாந்துக்கு எதிராக நடைபெற உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

லங்கா T10 Galle Marvels உரிமையாளர் கைது

லங்கா T10 சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் GALLE MARVELS அணியின் உரிமையாளரான இந்திய பிரஜை ஒருவர் ஆட்ட...

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் குகேஷ்

உலகின் இளைய செஸ் சாம்பியனாக சென்னையைச் சேர்ந்த 18 வயது டி குகேஷ் வெற்றி பெற்றுள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப்...

2034 உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடர் சவுதி அரேபியாவில்

2034ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடர் சவுதி அரேபியாவில் நடத்தப்படும் என FIFA நிர்வாகக் குழு உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன்...