follow the truth

follow the truth

April, 30, 2025
Homeவிளையாட்டுநெதர்லாந்து அணிக்கு வெற்றி

நெதர்லாந்து அணிக்கு வெற்றி

Published on

2024 இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் D குழுவின் கீழ் நேற்று இடம்பெற்ற போட்டியில் ஒன்றில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

நேபாளம் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையில் இந்த போட்டி இடம்பெற்றிருந்தது.

போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாள அணி அனைத்து விக்கெட்டுக்களையும் 106 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 109 ஓட்டங்களைப் பெற்று வெற்றிப் பெற்றுள்ளது.

இதேவேளை, நேற்று இடம்பெற்ற மற்றுமொரு போட்டி மழை காரணமாக வெற்றித் தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையில் இந்த போட்டி இடம்பெற்றது.

போட்டியில் முதலில் ஸ்கொட்லாந்து அணி துடுப்பெடுத்தாடிய நிலையில் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 90 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டது.

எவ்வாறாயினும், தொடர்ந்தும் மழை பெய்ததால் போட்டி கைவிடப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு...

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்குமா சென்னை? – ஹைதராபாத்துடன் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னையில் இன்று நடக்க இருக்கும் 43-ஆவது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை சென்னை சூப்பர்...

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்றைய ஐபிஎல் போட்டியில் அஞ்சலி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (23) இரவு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 41-வது லீக்...