follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP2இஸ்ரேலியர்களை அழைக்கும் இந்தியா

இஸ்ரேலியர்களை அழைக்கும் இந்தியா

Published on

இஸ்ரேல் நாட்டவர்களை மாலைத்தீவுக்குள் நுழைவதைத் தடை செய்யும் வகையிலான சட்டத்தை முன்மொழிய அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ள தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதற்கிடையே மாலைத்தீவில் இருக்கும் தங்கள் குடிமக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இஸ்ரேல் குடிமக்கள் வேறு ஒரு நாட்டில் இரண்டாவது கடவுச்சீட்டை வைத்திருந்தாலும் கூட மாலைத்தீவுக்கு வருவதைத் தடை செய்யும் வகையிலான சட்டத்தைக் கொண்டு வர அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
காஸா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர மாலைதீவு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சுற்றுலாத் துறையை முழுமையாக நம்பியிருக்கும் மாலைத்தீவு நாட்டிற்கு ஒவ்வொரு ஆண்டும் இஸ்ரேலில் இருந்து சுமார் 15,000 சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். இந்தச் சூழலில் தான் அவர்கள் வருகையைத் தடை விதிக்கும் வகையிலான முடிவை மாலைத்தீவு எடுத்துள்ளது.

எவ்வாராயினும் மாலைதீவு தடைவிதித்தால் என்ன இந்தியாவில் இஸ்ரேலியர்களுக்கு சுற்றுலா செல்ல எவ்வளவோ இடம் இருக்கிறது என இந்தியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை இட்டுள்ளது.

அதில் கேரளா, லக்ஷ்வ தீப், கோவா, நிகோபார் தீவுகளின் புகைப்படங்களை உள்ளடக்கி அந்த பதிவை இட்டுள்ளது. இங்கே உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இங்கே சிறந்த வசதிகள் உண்டு என்றும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று முதல் விசேட ரயில்கள் சேவையில்

அரசு வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்று(09) முதல் பல விசேட ரயில் சேவையில் ஈடுபடும் என ரயில்வே திணைக்களம்...

புதிய பாப்பரசராக ரொபர்ட் பிரிவோஸ்ட் தெரிவு

இரண்டு நாட்களாக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பை தொடர்ந்து, வாத்திகானின் நேரப்படி நேற்று(8) மாலை புதிய பாப்பரசராக அமெரிக்காவின் ரொபர்ட்...

மாணவி கடத்தல் முயற்சி – சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அருகே மாணவி ஒருவரை கடத்த முயன்ற சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில்...