follow the truth

follow the truth

September, 13, 2024
HomeTOP1தொடரும் ரயில் பணிப்புறக்கணிப்பு - 20 அலுவலக ரயில்கள் இரத்து

தொடரும் ரயில் பணிப்புறக்கணிப்பு – 20 அலுவலக ரயில்கள் இரத்து

Published on

ரயில் சாரதிகள் குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு இன்று (10) நான்காவது நாளாகவும் தொடரும் என லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இரண்டாம் வகுப்பு பதவி உயர்வு தாமதம், ஆட்சேர்ப்பில் தாமதம் உள்ளிட்ட பல பிரச்சினைகளின் அடிப்படையில் கடந்த 06ம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் இந்த தொழில் நடவடிக்கையை தொடங்கினர்.

ஐந்து ரயில் நிலையங்களில் இரண்டு ரயில் நிலையங்களின் சாரதிகள் மாத்திரம் இந்தப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் இதன் காரணமாக இன்ஜின் ரயில்கள் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட 05 தொழிற்சங்கங்களுக்கு இன்று தமது பிரச்சினைகளை முன்வைக்க கலந்துரையாடல் ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று நண்பகல் 12 மணிக்கு நெடுஞ்சாலைகள் அமைச்சில் போக்குவரத்து அமைச்சர் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இது வரையில் அவ்வாறானதொரு கலந்துரையாடல் இடம்பெறும் என தமக்கு தெரியாது என லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம்.சேனாநாயக்க தெரிவிக்கிறார்.

புகையிரத திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தவிடம் வினவியபோது, ​​இது தொடர்பான கலந்துரையாடல் தொடர்பில் லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவருக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதேவேளை, இன்று காலை 47 அலுவலக ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இன்று காலை 20 அலுவலக ரயில்கள் இயங்காது என லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் இன்ஜினியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பிரதான பாதையில் இருந்து கொழும்பு கோட்டைக்கு 11 புகையிரதங்களும், சிலாபம் மற்றும் வடக்கு பாதையில் இருந்து கொழும்பு கோட்டைக்கு தலா 04 புகையிரதங்களும்,கரையோர பாதையில் இருந்து கொழும்பு கோட்டைக்கு 18 புகையிரதங்களும், களனிவெளியில் இருந்து கொழும்பு நோக்கி 03 புகையிரதங்களும் இயங்கு என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து கரையோர பாதையில் 07 சேவை புகையிரதங்கள் சேவையில் ஈடுபடும் எனவும் நீண்ட தூர சேவை புகையிரதங்கள் வழமை போன்று இயங்கும் எனவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2025 பெப்ரவரியில் வாகன இறக்குமதிக்கான தடை நீக்கம்

2025 பெப்ரவரிக்குள் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மற்றும் ரூபாயின்...

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 20ஆம் திகதி...

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு நீதிமன்ற உத்தரவு

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளரை இன்று (13) நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இ-விசா முறை தொடர்பாக உச்ச நீதிமன்றம்...