follow the truth

follow the truth

July, 14, 2024
HomeTOP2பசி, பட்டினியால் காசாவில் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம்

பசி, பட்டினியால் காசாவில் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம்

Published on

தெற்கு காசாவில் உணவு விநியோகம் சிக்கலில் இருக்கிறது என்று ஐநா தெரிவித்திருக்கிறது. எனவே பசி, பட்டிணி காரணமாக ஏராளமான காசா மக்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

பலஸ்தீனத்தை இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க பல்வேறு ஆயுதம் ஏந்திய குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒன்றுதான் ஹமாஸ். இந்த அமைப்பு கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி திடீரென தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடி கொடுப்பதாக கூறி 200 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் ராணுவம், காசாவில் உள்ள பலஸ்தீன மக்கள் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது. இதில் 37 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். 75% பேர் குழந்தைகள் என பலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் ஐ நா பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். எனவே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின. இது நாள் வரை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

போர் காரணமாக காசாவுக்குள் நிவாரண பொருட்கள் எதுவும் வரவில்லை. இதனால் உணவுக்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உணவு கிடைக்காமல் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தொற்று நோய் பாதிப்புகளும் தீவிரமடைந்துள்ளன.

மறுபுறம் இந்த போரை எதிர்த்தும், போரில் இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்காவின் நிலைப்பாட்டை எதிர்த்தும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் சூடுபிடித்துள்ளன. அமெரிக்காவில் மட்டும் 50க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராடும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை அந்நாட்டு காவல்துறை கைது செய்து வருகிறது. தற்போது வரை 900க்கும் அதிகமானோர் கைதாகியுள்ளனர்.

இப்படி இருக்கையில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக ஹமாஸ் அறிவித்திருக்கிறது. இதுகுறித்து ஹமாஸ் மூத்த அதிகாரி சமி அபு ஸுஹ்ரி கூறுகையில், “போர்நிறுத்தம், பணயக்கைதிகளை திரும்ப ஒப்படைத்தல் போன்றவற்றை செய்ய தயராக இருக்கிறோம். போர் நிறுத்தம் என்பது அமெரிக்காவுக்கு உண்மையான சோதனையாகும். அவர்கள் போர் நிறுத்தத்திற்கு நிஜமாகவே தயாராக இருக்கிறார்களா? என்பது இப்போது தெரிந்துவிடும்” என்று கூறியிருந்தார்.

ஆனாலும் இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு தயராக இல்லை. எனவே தெற்கு காசா பகுதியில் உணவை விநியோகிக்க வாய்ப்பு சுத்தமாக இல்லை என்று ஐநா கூறியிருக்கிறது. ஐ.நாவின் உலக உணவு திட்டத்தின் துணை இயக்குனர் கார்ல் ஸ்காவ் கூறுகையில்,

“இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்துவது மற்றும் வளர்ந்து வரும் பொது சுகாதார நெருக்கடி காரணமாக தெற்கு காசாவில் உணவு விநியோகம் ஆபத்தில் இருக்கிறது. போர் காரணமாக மக்கள் அனைத்தையும் இழந்திருக்கிறார்கள். ஜநா கொடுக்கும் உணவு பொட்டலங்களை நம்பிதான் அவர்கள் இருக்கிறார்கள். ஆனால் தற்போது இதற்கும் வாய்ப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது” என்று கூறியுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

ஜப்பானில் பரவும் தசை உண்ணும் தொற்று நோய்: ஐந்து கர்ப்பிணிப் பெண்கள் பலி

ஜூலை 2023 மற்றும் மார்ச் 2024 க்கு இடையில், ஜப்பானில் ஸ்ட்ரெப்டோகாக்கல் பாக்டீரியா (STSS) காரணமாக ஐந்து கர்ப்பிணித்...

கஞ்சிபானியிடம் இருந்து தப்பிக்க பாதாள உலகத்தின் உதவியை நாடும் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள்!

மாகந்துரே மதூஷிடம் பணத்தை முதலீடு செய்து அவரது மரணத்தின் பின்னர் பணத்தை மறைத்த பல அரசியல்வாதிகள் மற்றும் மதூஷுடன்...

டெல்லி கேபிடல்ஸ் அணியிலிருந்து ரிக்கி பாண்டிங் இராஜினாமா

இந்தியன் பிரீமியர் லீக்கில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக பணியாற்றிய ரிக்கி பாண்டிங் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது...