ஹொரணையில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த வாகனம் ஒன்று இன்று அதிகாலை வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் குயில்வத்தை பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இன்று காலை 5.15 மணியளவில் இது நடந்தது.
சாரதி உறங்கியதால், வீதியை விட்டு விலகி தேயிலை தோட்டம் நோக்கி உருண்டு சென்றதால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வாகனம் பலத்த சேதமடைந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.