follow the truth

follow the truth

October, 6, 2024
HomeTOP1தென்னாபிரிக்க அணி 18 ஓட்டங்களால் வெற்றி

தென்னாபிரிக்க அணி 18 ஓட்டங்களால் வெற்றி

Published on

இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று முதல் சூப்பர் 8 போட்டிகள் ஆரம்பமாகின.

நேற்றைய முதல் போட்டியில் அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின.

இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 194 ஓட்டங்களை பெற்றது.

தென் ஆப்பிரிக்க அணி சார்பில் Quinton de Kock, 74 ஓட்டங்களை பெற்றார்.

அமெரிக்க அணி சார்பில் Harmeet Singh மற்றும் Saurabh Netravalkar ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

195 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய அமெரிக்க அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது.

அமெரிக்க அணி சார்பில் Andries Gous ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்களை பெற்றார்.

தென் ஆப்பிரிக்க அணி சார்பாக Kagiso Rabada, 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதற்கமைய இருபதுக்கு20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணிக்கும் அமெரிக்க அணிக்கும் இடையிலான போட்டியில் தென்னாபிரிக்க அணி 18 ஓட்டங்களால் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், நியாயமும் நிலைநாட்டப்படும்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துவதோடு, மீண்டும் அவ்வாறானதொரு அழிவுக்கு நாட்டுக்குள் இடமளிக்காத வகையில், பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதியும் நியாயமும்...

ஜனாதிபதித் தேர்தல் – இதுவரை பிரச்சார செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்கள்

செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 34 வேட்பாளர்கள் இதுவரை தமது தேர்தல் பிரச்சார செலவு...

உருளை கிழங்கு – வெங்காயத்திற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட இறக்குமதி வரியை நிதி அமைச்சு அதிகரித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ உருளை கிழங்கின்...