follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2என் அம்மா அப்பாவை திட்டாதீர்கள், தோற்றது வீரர்களின் தவறு.. - ஷம்மி

என் அம்மா அப்பாவை திட்டாதீர்கள், தோற்றது வீரர்களின் தவறு.. – ஷம்மி

Published on

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு ஏற்பட்ட தலைவிதியின் பின்னர் சமூக வலைத்தளங்களில் தன்னையும் தனது பெற்றோரையும் திட்டுவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.

உலகின் தலைசிறந்த வீரர்களுக்கு வழங்கப்படும் செலவீனமே இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் போட்டியின் போது எடுக்கப்பட்ட சில முடிவுகளைக் கண்டு ஆச்சரியப்பட்டதாக அவர் கூறுகிறார்.

இருப்பினும், கிரிக்கெட் நிறுவனம் எவ்வளவு செலவு செய்தாலும், வீரர்கள் விளையாடுகிறார்கள், அந்த பொறுப்பு அவர்களையே சாரும் என்று கூறுகிறார்.

இலங்கை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்வதற்கும், எதிர்வரும் போட்டிகளில் வெற்றியீட்டுவதற்கு அவர்களை தயார்படுத்துவதற்கும் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷுக்கு எதிராக நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...