follow the truth

follow the truth

May, 17, 2025
Homeஉலகம்ரஷ்யாவில் கொடூரத் தாக்குதல், பலர் பலி

ரஷ்யாவில் கொடூரத் தாக்குதல், பலர் பலி

Published on

ரஷ்யாவின் வடக்கு காக்கஸ் பிராந்தியத்தில் டகேஸ்டான் மாகாணத்தில் இரு நகரங்களில் தேவாலயம், மற்றும் யூத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் ஒரு காவல் சோதனைச் சாவடியில் நேற்று (23) துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் ஒரு மத குரு, 15 பொலிசார், பொதுமக்கள் உள்பட பலர் உயிரிழந்ததாக அப்பிராந்திய ஆளுநர் செர்கய் மெலிகோவ் தெரிவித்துள்ளார்.

டகேஸ்டான் மாகாணத்தில் மிகப் பெரிய நகரான மகாச்கலா மற்றும் கடற்கரை நகரான டெர்பன்ட்டில் நடந்த இத்தாக்குதலை தீவிரவாத சதி என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் மகாச்கலாவில் 4 பேரையும், டெர்பன்ட் நகரில் இருவரையும் பொலிசார் சுட்டு வீழ்த்தியுள்ளனர். நடந்த சம்பவத்தில் பொலிசார், பொதுமக்கள், மதகுரு என 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து டெலிகிராம் தளத்தில் கருத்து தெரிவித்த ஆளுநர் மெலிகோவ்;

“ஞாயிறு மாலை டெர்பன்ட், மகாச்கலாவில் நடந்த தாக்குதல் கண்டனத்துக்குரியது. சமூகத்தை சீர்குலைக்க நடந்த சதி. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? அவர்களின் இலக்கு என்னவென்பது எங்களுக்குத் தெரியும். போர் நம் வீடு வரைக்கும் நீள்வதை நாம் இன்று சந்தித்துள்ளோம். தாக்குதலில் ஈடுபட்ட 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இப்போது இரு நகரங்களிலும் இயல்பு திரும்பியுள்ளது. இந்த தாக்குதலின் பின்னணியில் ஸ்லீப்பர் செல்களாக செயல்பட்டவர்கள் அடையாளம் காணப்படுவார்கள்.

நடந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 24 – 26 ஆம் திகதி வரை துக்க நாட்கள் கடைபிடிக்கப்படும். தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்படுகின்றன.

இதுவரை இந்தத் தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் வெளிப்படையாக உரிமை கோரவில்லை. ரஷ்ய புலனாய்வுக் குழு இந்தத் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ளது.” என்றார்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் மாஸ்கோவில் ஒரு இசை நிகழ்ச்சியின் போது நடத்தப்பட்ட தாக்குதலில் 145 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு ரஷ்யாவில் நடந்த பெரிய தாக்குதலாக இது அமைந்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பலஸ்தீனியர்களை லிபியாவுக்கு இடமாற்றம் செய்ய அமெரிக்கா திட்டமா?

பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து...

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஹாங்காங்கின் முக்கிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு புதிய...

நிபந்தனையுடன் இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் – பாகிஸ்தான் பிரதமர்

பஹல்காம் தாக்குதலுக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. கடந்த மே 10 ஆம் திகதி...