follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP1இன்றைய சுகயீன விடுமுறை போராட்டத்துக்கு ஆசிரிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஆதரவு இல்லை

இன்றைய சுகயீன விடுமுறை போராட்டத்துக்கு ஆசிரிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஆதரவு இல்லை

Published on

இன்றைய தினம் இலங்கை அதிபர் ஆசிரியர் சங்கங்கள் சம்பள உயர்வு குறித்து சுகயீன விடுமுறையில் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இருப்பினும் பாடசாலைகளில் இணைக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் பாடசாலைகளிலே பணியாற்றுகின்றனர். அதன்படி இப்போராட்டம் நமக்கானதல்ல. இலங்கையில் உள்ள எந்த ஒரு ஆசிரியர் சங்கங்களோ அதிபர் சங்கங்களோ எமது நியாயமான போராட்டத்திற்கு வலுச்சேர்க்கவில்லை குரல் கொடுக்கவில்லை என பட்டதாரி ஒன்றியம் குற்றஞ்சாட்டி உள்ளது.

பல்வேறுபட்ட இடர்களுடன் கடந்த 10ம் திகதி அன்று கொழும்பில் இடம்பெற்ற போராட்டங்களில் எமது பாடசாலைகளில் ஆசிரிய பணி புரிந்துவரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்னல்களுக்கு உட்பட்டு வைத்திய சிகிச்சைகளை பெற்று வருகின்ற நிலையிலும் இன்றுவரை எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும், எமது நியமனம் சார்ந்தும் சத்தியாகிரக போராட்டம் தொடர்ந்து கொழும்பு கோட்டைக்கு முன்னால் இடம்பெற்று வருகிறது

“பாடசாலை சார்ந்த அரச உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிராக” எந்த குரலும் எழுப்பாத இவர்களின் போராட்டத்திற்கு எமது ஆதரவை வழங்க முடியாது.

அதே சமயம் இன்று 17வது நாளாக கொழும்பு புகையிரத கோட்டை நிலையம் முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்று வருகின்றமை என்பதும், அபிவிருத்தி உத்தியாகத்தர்களுக்காக அதிபர், ஆசிரியர் சங்கங்கள் குரல் கொடுக்காமை போன்ற காரணிகளால் இன்றைய போராட்டத்திற்க்கு வலு சேர்க்க தமது ஆதரவை வழங்க போவதில்லை என மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே இன்றைய நாள் நாடு முழுவதிலும் உள்ள பாடசாலையில் ஆசிரிய பணி புரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனைவரும் பாடசாலைக்கு சென்று “மாணவர்களது கல்வி நிலையின் பாதிப்பை தவிர்த்து”செயற்படுமாறு அன்போடு வேண்டுவதாகவும் பட்டதாரி ஒன்றியம் மேலும் கேட்டுக் கொள்கிறதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை...

முறைகேடு அல்லது மோசடி குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

பொலிஸார் தொடர்பில் ஏதேனும் முறைகேடு அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி...