follow the truth

follow the truth

June, 16, 2025
Homeஉள்நாடுயூடியூபரான இலங்கைப் பெண் பின்லாந்தில் கொலை

யூடியூபரான இலங்கைப் பெண் பின்லாந்தில் கொலை

Published on

பின்லாந்தில் வசித்து வந்த Hiruni’s Northern Life என்ற பிரபல யூடியூப் சேனலை நடத்தி வந்த ஹிருணி தனது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அந்நாட்டில் வாழ்ந்து வரும் அவர் மூன்று பிள்ளைகளின் தாயாவார்.

இந்த மரணம் தொடர்பான மேலதிக விபரங்களை பின்லாந்து ஊடகங்கள் வெளியிடாததுடன், சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாத்திரம் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்லாந்து ஊடகங்கள் ஹிருணியின் குடும்பத்தை தெற்காசிய குடும்பமாக அறிமுகப்படுத்தியுள்ளன.

அவர்கள் நீண்ட காலமாக அங்கு வசித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண் சமூக ஊடகங்களில் செயலில் உள்ளதாகவும், குடும்ப வீடியோக்களை ஊடகங்களுக்கு தொடர்ந்து அனுப்புவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மரணம் கடந்த வாரம் புதன்கிழமை நிகழ்ந்துள்ளது.

அன்றைய தினம் இச்சம்பவத்தையடுத்து இந்த வீட்டுக்குச் சென்ற பக்கத்து வீட்டுக்காரர் வீட்டின் கதவுக்கு அருகில் பெரிய இரத்தக்கறை இருப்பதைக் கண்டுள்ளார். ஹிருணியின் வீடு ஹெல்சின்கியில் அமைந்துள்ளது.

இந்த மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் உயிரிழந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கு வசிக்கும் இலங்கையர்கள் தெரிவிக்கின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மி.மீற்றருக்கும் அதிக பலத்த மழை

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என...

இலங்கையை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம்

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக...

சுகாதார அமைச்சருக்கும் ஐக்கிய தாதியர் சங்கத்திற்கும் இடையே கலந்துரையாடல்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஐக்கிய தாதியர் சங்கத்தின்...