follow the truth

follow the truth

April, 23, 2025
Homeஉள்நாடுகாணாமல் போன இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி கண்டுபிடிப்பு

காணாமல் போன இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி கண்டுபிடிப்பு

Published on

கடந்த புதன்கிழமை (26) இலங்கைக்கு விஜயம் செய்து காணாமல் போன 25 வயதான இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி தமர் அமிதாய் (Tamar Amitai) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை ரொலக்ஸ் ஹோட்டலில் தங்கியிருந்த இந்த யுவதி, கடந்த ஜூன் மாதம் 22ஆம் திகதி இலங்கைக்கு வந்து திருகோணமலை பகுதியில் தனியாக பயணித்த போது காணாமல் போயுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

புதன்கிழமை (26) முதல் அவர் விடுதிக்கு திரும்பவில்லை என அவர் தங்கியிருந்த ஹோட்டலின் உரிமையாளர்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

அதன்படி, உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்ததுடன், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், ஆளுநர் செயலகத்தின் மேற்பார்வையில், பொலிஸார், இராணுவம், பிராந்திய செயலகம், உப்புவெளி ஆகியன இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் தமர் அமிதை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் ஏ.பி.மாதன் தலைமையில் குழுவொன்றை நியமித்த ஆளுநர், காணாமல் போன சுற்றுலாப் பெண் தொடர்பான அறிக்கையை மூன்று மணித்தியாலங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அவர் தனது ஹோட்டலில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளிங்கோவிலில் கண்டுபிடிக்கப்பட்டார்.

அந்தப் பகுதிக்குச் சென்றபோது மயங்கி விழுந்துவிட்டதாகவும், ஆனால் உடல்ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ எந்தவிதமான துஷ்பிரயோகமும் இன்றி நல்ல நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்புச் செய்தி
திருகோணமலையில் இஸ்ரேலிய பெண் மாயம்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அனைத்து கத்தோலிக்கர்களுக்குமான கத்தோலிக்க திருச்சபையின் கோரிக்கை

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கொழும்பு அப்போஸ்தலிக்க தேவாலயம் இன்று முதல் 25 ஆம்...

கடந்த 24 மணித்தியாலத்தில் 19 முறைப்பாடுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 19 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இதன்படி, தேர்தல் தொடர்பான 04 குற்றவியல்...

கட்டான துப்பாக்கிச் சூடு – முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது

கட்டானையில் மோதலின்போது ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சந்தேகநபரான முன்னாள் பிரதேச சபை...