follow the truth

follow the truth

May, 17, 2025
HomeTOP2ஈரான் அரசை அழித்தொழிக்க இந்த ஒரு காரணமே போதும் - இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் தடாலடி

ஈரான் அரசை அழித்தொழிக்க இந்த ஒரு காரணமே போதும் – இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் தடாலடி

Published on

பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் நாளுக்குக் நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 9 மாதங்களாக நடந்து வரும் போரில் சுமார் 37,834 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 86,858 படுகாயமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே இஸ்ரேல் நடத்திய டதாக்குதலில் காசாவில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

பலஸ்தீனத்துக்கு ஆதரவாக உலக நாடுகள் பல குரல் கொடுத்து வருகிறது. குறிப்பாக ஈரான் இந்த விவகாரதத்தில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறது. ஈரானில் பிரதானமாக இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. பலஸ்தீன் லெபனான் எல்லையில் இருந்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு அவ்வப்போது தாக்குதல் நடத்தி நடத்தி வருகிறது.

இதனால் ஹிஸ்புல்லா எல்லையை விட்டு நீங்க வில்லையென்றால் லெபனானில் ராணுவ நடவைடிகைகளை மேற்கொண்டு ஹிஸ்புல்லாவை துடைதெரிய இஸ்ரேல் நேரம் பார்த்து காத்திருக்கிறது. இந்த நிலையில்தான் இஸ்ரேல் லெபனானுக்கு ராணுவத்தை அனுப்பும் பட்சத்தில் இஸ்ரேல் மீது தீவிரமான போரை முன்னெடுப்போம் என்று நேற்று நடந்த ஐ.நா கவுன்சில் கூட்டத்தில் ஈரான் எச்சரித்துள்ளது.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் காட்ஸ், இந்த ஒரு கருத்தே ஈரான் அரசை முழுவதுமாக அழித்தொழிக்க போதுமான காரணம் என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் யோகாவ் காலண்ட் சுமூகமான முறையில் ஈரான் – ஹிஸ்புல்லா பிரச்சினையை தீர்க்க வழி தேடி வருவதாக அந்நாட்டு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் முன்னாள் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஷி (Ebrahim Raisi) ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தநிலையில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்த நிலையில் ஈரான் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத மிகக் குறைவாக 39.93 சதவீத வாக்குகளே பதிவாகின.

மேலும் நேற்று வெளியான இந்த வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி யாருக்கும் பெரும்பாண்மை கிடைக்காததால் வரும் ஜூலை 5 ஆம் திகதி இரண்டாம் கட்டமாக மீண்டும தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அந்நாட்டு நீதித் துறை தலைவர் இப்ராஹிம் ரய்லி உட்பட அந்நாட்டின் அணுசக்தி துறையின் முன்னாள் ஆலோசகர் சயீத் ஜலீல், முன்னாள் தளபதி மோசின் ரேசாய், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ரசா ஜகானி, தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் ஹுசைன் காஜிஸ்தி, அந்நாட்டு மத்திய வங்கியின் தலைவர் அப்துல் நசீர் ஹிம்மதி, மிதவாத வேட்பாளர் மசூத் பெசெஷ்கியனி ஆகியோர் போட்டியிட்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஹாங்காங்கின் முக்கிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு புதிய...

இரவு நேர தபால் ரயில் சேவைகள் இரத்து

இரவு நேர தபால் ரயில் சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் 24...

துறைமுகங்கள், விமான நிலையங்களில் இலத்திரணியல் நுழைவாயில் அமைப்புக்கள் விரைவாக மேற்கொள்ளப்படும்

ஜப்பான் நாட்டின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் இலத்தரணியல் நுழைவாயில் அமைப்பை நிறுவும் திட்டத்தை விரைவாக மேற்கொள்வதற்கான விசேட கலந்துரையாடல் போக்குவரத்து,...