follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP1ட்ரம்ப் இற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியாது

ட்ரம்ப் இற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியாது

Published on

அமெரிக்க ஜனாதிபதி ஒருவரின் பதவிக்காலத்தில் எடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ முடிவுகளை எதிர்த்து ஒருபோதும் வழக்குத் தொடர முடியாது என்றும், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும் இது பொருந்தும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜனாதிபதியாக இருக்கும் போது பணிக்காலத்தை தாண்டி சிறப்புரிமை நீட்டிக்கப்படுவதாகவும், இதன் காரணமாக டொனால்ட் டிரம்ப் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் சில தடைகள் இருப்பதாகவும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
2020 ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை மாற்ற சதி செய்ததாக டிரம்ப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு 9 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு 6 நீதிபதிகள் உடன்பாட்டுடன் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

உச்சநீதிமன்றம் இந்த முடிவை அறிவித்த பிறகு, 2020 ஜனாதிபதித் தேர்தலின் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும் சதியின் கீழ் டொனால்ட் டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் நீதிபதியான மாவட்ட நீதிபதி தன்யா சுட்கானுக்கு இந்த முடிவு அனுப்பப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு டொனால்ட் டிரம்ப் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் ஜனாதிபதி பைடன் இந்த முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை...

முறைகேடு அல்லது மோசடி குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

பொலிஸார் தொடர்பில் ஏதேனும் முறைகேடு அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி...