follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP1கொழும்பு அல்டயர் சோகம் : விசாரணையில் பல திருப்பங்கள்

கொழும்பு அல்டயர் சோகம் : விசாரணையில் பல திருப்பங்கள்

Published on

கொம்பனித்தெருவில் உள்ள அல்டயர் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து தவறி விழுந்த 15 வயது மாணவனும் மாணவியும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று இடம்பெற்ற பிரேத பரிசோதனைகளின் பின்னர் அவர்களது சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனும் மாணவியும் உயிரிழந்துள்ளனர்.

குளிரூட்டிகள் பொருத்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் 03வது மாடியில் இவர்களது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதுடன், இயந்திரங்கள் தாக்கியதில் உடல்கள் பலத்த சேதமடைந்துள்ளன.

இந்த மாணவனுக்கும் மாணவிக்கும் இடையில் பலமான நட்புறவு இருந்ததாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த மாணவி உயரமான இடங்களில் புகைப்படம் எடுப்பதில் நாட்டம் கொண்டுள்ளார், மேலும் அவரது கைத்தொலைபேசியில் இதுபோன்ற பல புகைப்படங்களை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

அதன்படி, அவ்வாறான புகைப்படங்களை எடுக்க முற்பட்ட போது இருவரும் 67வது மாடியில் இருந்து கீழே விழுந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எவ்வாறாயினும், விபத்து ஏற்படுவதற்கு முன்னர் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் நிலவுவதாக விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அல்டேர் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறுவதற்கு அங்கு வசித்த அவர்களது நெருங்கிய நண்பர் ஒருவரால் அனுமதி வழங்கப்பட்டது.

அந்த நண்பரின் ஆதரவினால் குறித்த மாணவனும் மாணவியும் அடிக்கடி வீட்டுத் தொகுதிக்கு வந்து செல்லும் நிலையில், அன்றைய தினம் அங்கு வருவதை பெற்றோருக்கு தெரிவிக்கவில்லை என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மகள் வீட்டிற்கு வர தாமதமானதால், அவரது தந்தை மாணவனுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி கேட்க, ஆனால் அவர் தன்னுடன் இல்லை என்று கூறியுள்ளார்.

எனினும் இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்படும் என குறித்த மாணவியின் தந்தை கூறியதையடுத்து எழுந்த அச்சம் காரணமாக இருவரும் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்தார்களா என்பது தொடர்பிலும் விசாரணை அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக மாணவன் மற்றும் மாணவியின் கைத்தொலைபேசிகளும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளன.

கொம்பனித்தெரு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கபில விஜேமான்ன தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை, சம்பவத்தன்று மாணவி பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக வெளியான செய்திகள் பொய்யானவை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இணைப்புச் செய்தி
அல்டயார் அடுக்குமாடியில் இருந்து குதித்த மாணவி சம்பவத்தன்று பாடசாலையில் இருந்து விலக்கப்பட்டாரா?

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை...

முறைகேடு அல்லது மோசடி குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

பொலிஸார் தொடர்பில் ஏதேனும் முறைகேடு அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி...