follow the truth

follow the truth

July, 6, 2025
HomeTOP2அல்டயார் அடுக்குமாடியில் இருந்து குதித்த மாணவி சம்பவத்தன்று பாடசாலையில் இருந்து விலக்கப்பட்டாரா?

அல்டயார் அடுக்குமாடியில் இருந்து குதித்த மாணவி சம்பவத்தன்று பாடசாலையில் இருந்து விலக்கப்பட்டாரா?

Published on

கொம்பனி வீதி அல்டயார் அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் 15 வயது மாணவி இதற்கு முன்னரும் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கொழும்பு குருந்துவத்தையில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் இந்த மாணவனும் மாணவியும் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

இந்த மாணவனுக்கும் மாணவிக்கும் இடையே காதல் தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்கள் இதுவரையில் விசாரணையில் இல்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் போதைப்பொருள் உட்கொண்டதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை.

ஆனால் 67வது மாடியின் பால்கனியில் இருந்து மாணவனும் மாணவியும் தரையில் குதித்த இடத்தில் இருந்து ஒரு ஜோடி காலணிகள், பணப்பைகள், மொபைல் போன்கள் மற்றும் சிகரெட் பாக்கெட் ஆகியவற்றை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் இருவரும் வெள்ளவத்தை மற்றும் களனி பிரதேசங்களில் வசிப்பவர்கள் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குருந்துவத்தை சர்வதேச பாடசாலையில் இருவரின் வகுப்பிலும் கல்வி கற்கும் இமாம் என்ற பாகிஸ்தான் மாணவனின் தந்தைக்கு இந்த சுப்பர் குடியிருப்பில் சொந்தமாக வீடு இருப்பது தெரியவந்துள்ளதுடன் உயிரிழந்த மாணவனும் மாணவியும் அங்கு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இமாமின் நட்பின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவனும் மாணவியும் இந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அடிக்கடி சென்று வந்தது தெரியவந்துள்ளது.

அடுக்குமாடியின் செக்யூரிட்டி அதிகாரிகளிடம் இமாம் தனது நண்பர்கள் வந்தால் அடுக்குமாடிக்குள் நுழைய அனுமதிக்குமாறு கூறியுள்ளார்.

அதன்படி நேற்றுமுன்தினம் (02) மாலை பாடசாலை முடிந்து இந்த மாணவனும் மாணவியும் முச்சக்கர வண்டியில் குடியிருப்புக்கு வந்துள்ளனர். அடுக்குமாடி கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் உள்ள ஜிம் இற்கு சென்று பாடசாலை சீருடைகளை கழற்றிவிட்டு மற்ற உடைகளை அணிந்து கொண்டு லிஃப்டில் 67வது மாடிக்கு சென்றது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. இமாமின் குடியிருப்பு 65வது மாடியில் இருந்தது.

அவர்கள் அனைத்து பொருட்களையும் பால்கனியில் வைத்துவிட்டு 67வது மாடியில் இருந்து குதித்ததாக பொலிசார் கூறுகின்றனர்.

இவர்களது உடல்கள் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் கிடந்த நிலையில் பொலிசாரால் கண்டெடுக்கப்பட்டது.

இச்சம்பவத்தன்று உயிரிழந்த மாணவி அவள் படிக்கும் பாடசாலையில் இருந்து விலக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொம்பனி வீதி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கபில விஜேமான்ன தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...