அதுருகிரிய, ஒருவல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பிரபல வர்த்தகரான சுரேந்திர வசந்த எனப்படும் கிளப் வசந்த என்பவர் உயிரிழந்துள்ளார்.
அதேநேரம் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரபல சிங்களப் பாடகி கே. சுஜீவவும் காயமடைந்தோரில் உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் அவசர சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.