ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்குமாறு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை நிராகரிக்குமாறு கோரி தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச இடைக்கால மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்ட போது, ஜனாதிபதியின் பதவிக் காலத்தை 5 வருடங்களாக மட்டுப்படுத்துவதே நாடாளுமன்றத்தின் நோக்கமாக இருந்தது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றும் ஏனைய விடயங்களைத் தெரிவித்து விமல் வீரவன்சவினால் இந்த இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி நிஷான் பிரமித்திரத்ன, சட்டத்தரணி கமிது கருணாசேன, ஷெனாலி டயஸ், நிமாஷி பெர்னாண்டோ உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினால் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் மனுவை நிராகரிக்குமாறு கோரி இன்று (08) உச்ச நீதிமன்றில் இந்த இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.