follow the truth

follow the truth

December, 3, 2024
HomeTOP1சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் : A9 வீதி போக்குவரத்து முடக்கம்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் : A9 வீதி போக்குவரத்து முடக்கம்

Published on

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக பொதுமக்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஏ9 வீதியின் போக்குவரத்து முற்றாக முடங்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னேற்றத்தை வலியுறுத்தியும், வைத்திய பணிகளை உடன் வழமைக்கு திரும்ப வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடாத்தப்படுகின்றது.

அத்துடன், சாவகச்சேரி வைத்திய சாலை போராட்டத்துற்கு ஆதரவு சேர்க்கும் வகையில் கடையடைப்பு கண்டன போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரை பதவி நீக்கம் செய்து, கைது செய்ய முயற்சிப்பதாக நேற்றிரவு வெளியான தகவலை அடுத்து, பொதுமக்கள் வைத்தியசாலை வளாகத்தில் கூடியதால் , நேற்று நள்ளிரவு அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொக்கோ விலை அதிகரிப்பு

இவ்வருடம் ஒரு கிலோகிராம் முதலாம் தர கொக்கோவின் விலை 1,425 ரூபாவாக பதிவாகியுள்ளது. கடந்த வருடத்தில் ஒரு கிலோகிராம் முதலாம்...

வெள்ள அனர்த்தம் – எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

வடக்கில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட பிராந்தியங்களில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் விழிப்புடன் செயற்படுமாறு கிளிநொச்சி பிராந்திய...

சாதாரண தரப் பரீட்சை – விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீடிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2024 (2025) ஆண்டுக்கான விண்ணப்பங்களுக்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் 10 ஆம்...