follow the truth

follow the truth

December, 3, 2024
HomeTOP1அலி சப்ரி ரஹீமுக்கு திறந்த பிடியாணை

அலி சப்ரி ரஹீமுக்கு திறந்த பிடியாணை

Published on

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதியும் நீதவானுமான அயோனா விமலரத்ன கல்பிட்டி சுற்றுலா நீதவான் நீதிமன்றில் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளார்.

கல்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருஞம்பிட்டிய தளமாகக் கொண்ட அரச சார்பற்ற நிறுவனமொன்று புத்தளம் நீதவான் நீதிமன்றில் பாராளுமன்ற உறுப்பினரை பிரதிவாதியாக மொழியப்பட்ட வழக்கை விசாரித்த போதே நீதவான் இந்த உத்தரவை வழங்கினார்.

இதற்கு முன்னரும், பிரதிவாதியான நாடாளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை, உறுப்பினர் சார்பில் சட்டத்தரணியும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அரச சார்பற்ற நிறுவனமொன்றுக்கு சொந்தமான கட்டிடத்திற்குள் நுழைந்து சொத்துக்களை அழித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கல்பிட்டி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளாகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அனர்த்தத்தினால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

கடந்த சில நாட்களாக ஏற்பட்ட அனர்த்தத்தினால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் விசேட கவனம்...

நிஹால் தல்துவ பதவியில் இருந்து நீக்கம்

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதன்படி,...

லிட்ரோ சமையல் எரிவாயு விலை திருத்தம் நாளை

மாதாந்த சமையல் எரிவாயு விலை திருத்தத்தின் பிரகாரம் டிசம்பர் மாத விலை திருத்தம் நாளை (04) அறிவிக்கப்படும் என...