follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP2அயதுல்லா அல் கமேனியின் அதிகாரத்தினை சரிக்கும் ஈரானின் புதிய ஜனாதிபதி

அயதுல்லா அல் கமேனியின் அதிகாரத்தினை சரிக்கும் ஈரானின் புதிய ஜனாதிபதி

Published on

ஈரானிய நாடாளுமன்றத்தின் ஒப்பீட்டளவில் மிதவாத உறுப்பினரான மசூத் பெசெஷ்கியன்  (Masoud Pezeshkian) கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தனது கடும்போக்கு போட்டியாளரை தோற்கடித்த பின்னர் ஈரானின் அடுத்த ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டார்.

கடந்த மாதம் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த இப்ராஹிம் ரைசிக்கு பதிலாக 69 வயதான புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டார்.

அவர் ஆட்சிக்கு வந்ததன் மூலம் தீவிரவாதிகளின் சக்தியும், அந்நாட்டின் ஆன்மீகத் தலைவருமான அயதுல்லா அல் கமேனியின் அதிகாரம் சரிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Massoud Pesheshkian ஆட்சிக்கு வந்த பிறகு சுதந்திரம் மீதான அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளால் விரக்தியடைந்த இளைஞர்கள் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்காலம் குறித்து பலரும் ஏமாற்றம் அடைந்திருக்கும் நேரத்தில் அவர் ஆட்சிக்கு வருவது விசேடம்சமாகும்.

1990 களில், அவர் ஒரு கார் விபத்தில் தனது மனைவியையும் ஒரு குழந்தையையும் இழந்தார்.

அவர் மறுமணம் செய்து கொள்ளவில்லை, மேலும் அவர் தனது மற்ற மூன்று குழந்தைகளை தனியாக வளர்த்த அன்பான தந்தை என்று கூறப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாடு

பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாடு எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை...

எல்பிட்டிய தேர்தல் – பிரசார பணிகள் நாளையுடன் நிறைவு

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகளை நாளை (23) நள்ளிரவுடன் நிறைவு செய்ய வேண்டுமென தேர்தல்கள்...