முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பயணித்த கார் கருவலகஸ்வெவ பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
வீதியில் நுழைந்த துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் காரின் மீது மோதாமல் இருக்க முற்பட்டதில் கார் வீதியை விட்டு விலகிச் சென்றதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.