follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுரிச்சர்ட் பீரிஸ் குழுமத்தின் தலைவர் சேனா யத்தெஹி பாலியல் வன்கொடுமை செய்து நாட்டை விட்டு வெளியேறினாரா?

ரிச்சர்ட் பீரிஸ் குழுமத்தின் தலைவர் சேனா யத்தெஹி பாலியல் வன்கொடுமை செய்து நாட்டை விட்டு வெளியேறினாரா?

Published on

வணிக ஆய்வாளர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் கோடீஸ்வர வர்த்தகரான இலங்கையின் முன்னணி நிறுவனமான ரிச்சர்ட் பீரிஸ் குழுமத்தின் தலைவர் சேனா யத்தெஹிகே நாட்டை விட்டு வெளியேறுவதற்கு கோட்டை நீதவான் கோசல சேனாதீர தடை விதித்துள்ளார்.

குறித்த கோடீஸ்வர வர்த்தகர், கொள்ளுப்பிட்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து குறித்த வணிக ஆய்வாளரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, கொள்ளுப்பிட்டி பொலிஸ் அதிகாரிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைய, வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இளம் வணிக ஆய்வாளர் செய்த முறைப்பாடு தொடர்பான விசாரணையின் முன்னேற்றத்தை தெரிவித்த கொள்ளுப்பிட்டி பொலிஸ் அதிகாரிகள், சுமார் ஒரு மாத காலமாக வெளிநாட்டில் இருந்த சேனா யத்தெஹிகே இலங்கை வந்தபோது, தான் இல்லாத காலகட்டத்தில் ரிச்சர்ட் பீரிஸ் குழுமத்தின் வர்த்தக விவகாரங்களை ஆய்வு செய்ய எனக் கூறி கொள்ளுபிட்டியவில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு முறைப்பாட்டாளரை அழைத்து இவ்வாறு முறைகேடாக நடந்து கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த அழைப்பாணையின் பிரகாரம், அவர் கடந்த மே மாதம் 7ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்றதாகவும், வியாபார விவகாரங்களை ஆராயத் தயாரான போது சந்தேகநபர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் காரணமாக சந்தேகநபர் வெளிநாடு செல்வதை தடைசெய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கொள்ளுப்பிட்டி பொலிஸ் அதிகாரிகள் கோரிய போது, ​​முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்டு சந்தேக நபருக்கு பயணத்தடை விதித்து, சந்தேக நபர் நாட்டை விட்டு வெளியேற வந்தால் கைது செய்ய வேண்டும் எனவும் நீதவான் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

எவ்வாறாயினும், அவர் தீர்மானித்த அன்றே வெளிநாடு சென்றுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க உள்ளிட்ட மூன்று...

ஊழலுக்கு எதிரான பணிகளுக்காக இலங்கைக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கிய ஜப்பான்

ஊழல் எதிர்ப்பு வழிமுறைகளை வலுப்படுத்தவும், பொது நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கவும் ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத்...

தொழிலுக்காக வெளிநாடு செல்பவர்களுக்கான அறிவித்தல்

சுயதொழில் மூலம் தொழில்துறை மற்றும் நிறுவனத் துறைகளில் வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் தொழிலாளியின் வேலை வாய்ப்பு ஒப்பந்தத்தை...