களுத்துறை மாவட்ட செயலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
5 மாடி கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்துடன் அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தீயை கட்டுப்படுத்தும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக தீயணைப்பு பிரிவினரின் உதவி பெறப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.