பொலிஸ் மா அதிபராக தேஷபந்து தென்னகோன் கடமையாற்றுவதைத் தடுக்கும் உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு தேர்தலுக்கு எந்தத் தடையும் இல்லை என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
குறித்த நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் தேஷபந்து தென்னகோனுக்கு அந்தப் பதவியில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்காது எனவும், ஆனால் பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதன்படி எதிர்காலத்தில் தேர்தலை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என ரோஹன ஹெட்டியாராச்சி எம்மிடம் மேலும் தெரிவித்தார்.