2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது நாளையுடன் (05) முடிவடைகிறது.
அதன்படி, விண்ணப்பங்களை நாளை நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னதாக உரிய மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கு இன்னும் 47 நாட்களே உள்ளன.