தென்னை பயிர்ச்செய்கையில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விசாரிக்க உடனடி தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி 1916 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பிரச்சினைகளை தெரிவிக்க முடியும் என தென்னை பயிர்ச்செய்கை சபை தெரிவித்துள்ளது.
மேலும், தென்னை விவசாயிகளுக்காக தேங்காய் செயலி என்ற புதிய மென்பொருள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.