follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP2மீண்டும் பற்றி எரியும் பங்களாதேஷ்.. நாடளாவிய ரீதியாக ஊரடங்கு

மீண்டும் பற்றி எரியும் பங்களாதேஷ்.. நாடளாவிய ரீதியாக ஊரடங்கு

Published on

பங்களாதேஷில் இப்போது மீண்டும் மிகப் பெரியளவில் மாணவர் போராட்டம் நடந்து வெடித்துள்ளது. இந்த வன்முறையில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வன்முறையைக் கட்டுப்படுத்த பங்களாதேஷ் பொலிசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

இருப்பினும், அதை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. பங்களாதேஷில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து மாணவர் போராட்டம் வெடித்த நிலையில், போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதனால் போராட்டம் சற்றே ஓய்ந்து இருந்த நிலையில், இப்போது பங்களாதேஷில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இன்று காலை வெடித்த இந்த வன்முறையில் சுமார் 30க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல நூறு பேர் காயமடைந்துள்ளனர்.

அங்குப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் ஆளும் கட்சி ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் இதுவே உயிரிழப்புகளுக்குக் காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு விவகாரத்தில் தீர்ப்பு கிடைத்துவிட்ட போதிலும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி அங்கே பல ஆயிரம் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும், இந்த போராட்டத்தில் உயிரிழந்தோருக்கு நீதி வேண்டும் என்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க பங்களாதேஷ் அரசு கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் வருகின்றனர். இருப்பினும், அதில் எந்தவொரு பலனும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

போராட்டங்கள் கையைவிட்டுப் போய் இருக்கும் சூழலில், நிலைமையை சமாளிக்க அங்கே மறு அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு முமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை ஊரடங்கு அமுலுக்கு வரும் நிலையில், அதைத் தாண்டி போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

அங்கே இந்த மாணவர் போராட்டத்தை ஒடுக்க பொலிசார் இதுபோல மொத்தமாக ஊரடங்கை அறிவிப்பது இதுவே முதல்முறையாகும்.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவின் பல இடங்களைப் போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

அங்குப் பல முக்கிய இடங்களில் சிறுசிறு மோதல்களும் நடந்துள்ளன. மேலும், போராட்டக்காரர்கள் முக்கிய நெடுஞ்சாலைகளை முடக்கியுள்ளனர். இந்த மாணவர் போராட்டத்திற்கு பங்களாதேஷ் எதிர்க்கட்சியின் ஆதரவும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

மேலும், அங்கே போராட்டக்காரர்கள் ஒத்துழையாமை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். அங்கு பிரதமர் பதவி விலகும் வரை மக்கள் யாரும் வேலைக்குச் செல்லக் கூடாது என்றும் வரி செலுத்தக்கூடாது என வலியுறுத்தியுள்ளனர். அதையும் மீறி இன்று திறக்கப்பட்ட அலுவலகங்கள் மற்றும் கடைகள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல்களை நடத்தினர்.

மேலும், அங்கு சில இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு மற்றும் வாகனங்களுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும்...

வீதி பராமரிப்பு – ரயில் பாதைக்கு தற்காலிக பூட்டு

களனிவெளி ரயில் மார்கத்தில், பேஸ்லைன் வீதி மற்றும் நாரஹேன்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான வீதி பராமரிப்புக்காக தற்காலிகமாக மூடப்படும்...

6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்

ஐ.டி. நிறுவனங்கள் மீண்டும் தங்கள் ஊழியர்களை குறைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். AI-ஐ மையமாக கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான...