follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1கட்டுப்பணம் செலுத்திய அநுர

கட்டுப்பணம் செலுத்திய அநுர

Published on

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார திஸாநாயக்கவுக்கு கட்டுப்பணம் இன்று செலுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் 15ஆம் திகதி வேட்புமனுவை தாக்கல் செய்ய தயாராகி வருவதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

நாட்டைக் கட்டியெழுப்பும் கொள்கைகளுக்கு மதிப்பளிக்கும் வேலைத்திட்டத்துடன் கூடிய அரசியலை வெல்வதே தமது கட்சியின் நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தேர்தல் நாளுக்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும், நாட்டின் தலைமைக்கு தெளிவான அரசியல் தலைவரை நியமிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், நாட்டு மக்கள் தற்போது “நாட்டை அநுரவிற்கு கையளிப்பதற்கு தயாராக உள்ளனர்” எனவும் அவர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...