follow the truth

follow the truth

September, 13, 2024
HomeTOP2பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்த முகமது யூனுஸ்

பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்த முகமது யூனுஸ்

Published on

பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்த நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் நியமிக்கப்படுவார் என பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது சஹாபுதீன் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் சங்கங்கள் உட்பட ஏனைய சிவில் அமைப்புக்கள் விடுத்துள்ள கோரிக்கையை கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாணவர் போராட்டங்களை எதிர்கொண்டு, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை இராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறினார், இராணுவம் போராட்டக்காரர்களிடம் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதாக கூறியதை அடுத்து.

ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள், முகமது யூனுஸை இடைக்கால பிரதமராக நியமிக்க வேண்டும் என்று ஒரே குரலில் கூறினர்.

அதன்படி, பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன், மாணவர் சங்க தலைவர்கள், முப்படைத் தலைவர்கள், எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் ஆகியோருக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸை இடைக்கால பிரதமராக நியமிக்க ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“இன்றைய பங்களாதேஷின் நிலைக்கு இலங்கை செல்வதை நான் தலையிட்டு தடுத்தேன்”

நாட்டின் அரச அதிகாரத்தில் வெற்றிடம் ஏற்பட இடமளிப்பது பாரிய துயரத்துக்கு வழிவகுக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். எனவே,...

விவாகரத்து செய்யப்பட்ட துபாய் இளவரசியிடம் இருந்து “Divorce” என்ற வாசனை திரவியம்

அண்மையில் துபாய் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஹயா பின்ட் அல் ஹுசைன் இளவரசி, தனது கணவர் ஷேக் முகமது...

கமலா ஹாரிஸ் உடன் மீண்டும் நேரடி விவாதம் கிடையாது – டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5ம் திகதி நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதியான...