follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP2பங்களாதேஷில் மீண்டும் பதற்றம் - நீதிபதிகள் பதவி விலகக்கோரி மாணவர்கள் போராட்டம்

பங்களாதேஷில் மீண்டும் பதற்றம் – நீதிபதிகள் பதவி விலகக்கோரி மாணவர்கள் போராட்டம்

Published on

பங்களாதேஷில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தால் அவர் பதவி விலகி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அங்கு மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இந்த நிலையில் பங்களாதேஷில் தலைமை நீதிபதி உள்பட அனைத்து நீதிபதிகளும் பதவி விலகக் கோரி மாணவர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். நீதிபதிகள் பதவி விலக ஒரு மணி நேரம் கெடு விதிப்பதாக மாணவ அமைப்புகள் தெரிவித்தன.

மேலும், சுப்ரீம் கோர்ட்டை முற்றுகையிடும் வகையில் மாணவர்கள் திரண்டனர். இதையடுத்து அனைத்து நீதிபதிகள் கூட்டத்தை தலைமை நீதிபதி ரத்து செய்தார்.

அரசு வேலை வாய்ப்பில் சுதந்திர போராட்ட வாரிசுகளுக்கு 30 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு கோர்ட்டு அனுமதி அளித்ததால் அதை எதிர்த்து மாணவர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினர்.

அதன்பின் இட ஒதுக்கீடு 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் நீதிபதிகளுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால் பங்களாதேஷில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வீரர்களை நாடு திரும்புமாறு தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை அறிவிப்பு

தமது அணி வீரர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதிக்குள் நாடு திரும்ப வேண்டும் எனத் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை...

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே...

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின்...