ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கலந்துரையாடல் சுமந்திரன் வீட்டில் இடம்பெற்றது. இன்று (10) காலை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசமும் கலந்துகொண்டார்.
தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் அங்கு கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்காலத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சியுடன் கலந்துரையாட எதிர்ப்பார்ப்பதாக நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.