follow the truth

follow the truth

December, 3, 2024
Homeஉலகம்பங்களாதேஷிற்கு புதிய தலைமை நீதிபதியாக சையது ரெஃபாத் பதவியேற்பு

பங்களாதேஷிற்கு புதிய தலைமை நீதிபதியாக சையது ரெஃபாத் பதவியேற்பு

Published on

பங்களாதேஷ் நாட்டின் அரசியல் அசாதாரண சூழல் காரணமாக, பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை இராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன் பதவி விலகினார். இதைத்தொடர்ந்து, பங்களாதேஷின் புதிய தலைமை நீதிபதியாக சையது ரெஃபாத் அகமது இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

பங்களாதேஷில் பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திரப் போரில் பங்கேற்று உயிரைத் தியாகம் செய்த இராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை அமுலில் இருந்தது. கடந்த 2018 இல் மாணவர்களின் போராட்டம் காரணமாக இந்த முறை இரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், 30 சதவீத இடஒதுக்கீடு முறை மீண்டும் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார்.

பங்களாதேஷில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் மத்தியில் பெரும் போராட்டம் வெடித்தது. இதைத்தொடர்ந்து, அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த 5ம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்தார். உயிருக்கு பயந்து ஷேக் ஹசீனா உடனே பங்களாதேஷில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். ஷேக் ஹசீனா மற்றும் அவரது தங்கை ரெஹானாவும் மத்திய அரசின் பாதுகாப்பில் இரகசிய இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷ் நாட்டின் அரசியல் அசாதாரண சூழ்நிலையால் தொடர்ந்து பதற்றம் நிலவிக் கொண்டிருக்கிறது. அந்த நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா முதல் உச்ச நீதிமன்ற நீதிபதி வரை பதவியை இராஜினாமா செய்துள்ளனர். தொடர்ந்து அந்த மாநிலத்தில் இந்து, கிறிஸ்துவ, புத்த உள்ளிட்ட சிறுபான்மை சமுதாயத்தினர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதனால் இரு நாடுகளின் எல்லையிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

மாணவர்களின் தொடர் போராட்டம் மற்றும் வன்முறையைத் தொடர்ந்து, ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்தது. பங்களாதேஷில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள இடைக்கால அரசுக்கு முகமது யூனிஸ் தலைமை வகித்துள்ளார். இதையடுத்து, ஆட்சி கவிழ்ந்த ஆறே நாட்களில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன் (65) பதவி விலகினார். இந்நிலையில், பங்களாதேஷின் புதிய தலைமை நீதிபதியாக சையது ரெஃபாத் அகமது இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

பங்களாதேஷ் ஜனாதிபதி மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சையது ரெஃபாத் அகமது புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தலைமை நீதிபதிக்கு ஜனாதிபதி முகமது சஹாபுதீன் பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார். பதவியேற்பு விழாவை அமைச்சரவை செயலர் மஹ்பூப் ஹூசைன் நடத்தினார் என்று பிரபல செய்தித்தாளில் செய்திகள் வெளியாகியுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

100% வரி – இந்தியா, சீனா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் விடுத்த எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப், டாலருக்கு மாற்று வழியைத் தேடும் விவகாரம் குறித்து பிரிக்ஸ் (BRICS)...

ஜோ பைடனால் தனது மகன் ஹண்டருக்கு அதிகாரப்பூர்வ மன்னிப்பு : நீதியின் கருச்சிதைவு – டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது மகன் ஹண்டர் பைடனுக்கு உத்தியோகபூர்வ ஜனாதிபதி மன்னிப்பை வழங்கியுள்ளார், அவர் சட்டவிரோத...

கனடாவிலிருந்து வெளியேற்றப்படும் 7 இலட்சம் வெளிநாட்டு மாணவர்கள்

கனடா நாட்டில் பல இலட்சம் வெளிநாட்டு மாணவர்கள் தங்கிப் படித்து வருவது அனைவருக்கும் தெரியும். அவர்களில் சுமார் 7...