follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1தனமல்வில சம்பவத்தில் 17 பாடசாலை மாணவர்கள் கைது

தனமல்வில சம்பவத்தில் 17 பாடசாலை மாணவர்கள் கைது

Published on

தனமல்வில பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவியை ஒரு வருடமாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 17 பாடசாலை மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதித்த போது அங்கிருந்த வைத்தியர் ஒருவர் மாணவியை பயமுறுத்திய நிலையில் குறித்த மாணவி தற்கொலைக்கு முயன்றதாக மாணவியின் தாய் குற்றம் சுமத்தியுள்ளார்.

தனமல்வில பிரதான பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி அதே பாடசாலை மாணவன் ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர், மாணவியை ஏமாற்றி தனது நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்ற குறித்த மாணவன் அங்கு அவர் முதல் முறையாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அந்த வீட்டில் இருந்த வேறு சில மாணவர்கள் மாணவியை மது அருந்த வைத்து வலுக்கட்டாயமாக துஷ்பிரயோகம் செய்து பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளார்கள் என்று பொலிசார் தெரிவித்தனர்.

இந்த வீடியோவைக் காட்டி சந்தேகநபர்கள் 2023ஆம் ஆண்டு முதல் 7 தடவைகள் மாணவியை கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் சம்பந்தப்பட்ட பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை 17 ஆகும்.

அங்கு 7 மாணவர்கள் சேர்ந்து மாணவியை ஆற்றின் அருகே அழைத்துச் சென்று கூட்டு பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்த பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட ஒழுக்காற்று குழுவிற்கு தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் விசாரணையில், பாடசாலையின் ஒழுக்காற்றுக் குழுவினர், பாடசாலை அதிபர் உள்ளிட்ட மாணவர்கள், மாணவியையும், சம்பந்தப்பட்ட மாணவர்களையும் அழைத்து வந்து உண்மைகளை விசாரித்து, பாடசாலைக்கு களங்கம்  விளைவிக்காது சம்பவத்தை மறைக்க முயன்றுள்ளனர்.

சந்தேகநபர்களில் தனமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரிய ஆலோசகர் ஒருவரின் மகனும் அடங்குவதும், மாணவனின் தாயாரும் பாடசாலை ஆசிரியை என்பதும் இதற்குக் காரணம்.

தனக்கு நடந்த இந்த குற்றம் மற்றும் வன்முறை குறித்து மாணவி தனது வீட்டின் சுவர்களில் பல்வேறு ஓவியங்களை வரைந்துள்ளார்.

எனினும் இந்த சம்பவம் தொடர்பில் தனமல்வில பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மாணவியை காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தியதில் மேலும் பல தகவல்கள் வெளியாகின.

சம்பவத்தை மறைத்த அதிபர் உட்பட பலரிடம் வாக்குமூலம் பதிவு செய்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில் 17 மாணவர்களையும், சம்பவத்தை ஆதரித்த ஒரு பெண்ணையும் கைது செய்தனர்.

இவர்கள் இன்று வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை, துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவி ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட போது, ​​அங்கிருந்த வைத்தியர் ஒருவர் மாணவியை மேலும் கொடுமைப்படுத்தியதாக அவரது தாயார் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்படி, மாணவியின் தாயார் சம்பவம் தொடர்பில் ஹம்பாந்தோட்டை பொலிஸாரிலும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையிலும் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...