follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1நாமல் ராஜபக்ஷ வேட்பு மனுவில் கையொப்பம்

நாமல் ராஜபக்ஷ வேட்பு மனுவில் கையொப்பம்

Published on

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நாமல் ராஜபக்ச வேட்பு மனுவில் கையொப்பமிட்டார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய நாமல் ராஜபக்ஷவுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் அவர்களால் இன்று (14ஆம் திகதி) காலை கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் கட்சியால் முன்வைக்கப்பட வேண்டும் என்பதே அக்கட்சியில் உள்ள பலரது நிலைப்பாடாக இருந்தது.

கட்சி தமக்கு வேட்புமனுவை வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வர்த்தகர் தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.

ஆனால் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக ஆகஸ்ட் 06ஆம் திகதி செய்திகள் வெளியாகின.

இதன்படி, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக திரு நாமல் ராஜபக்ஷவின் பெயர் ஆகஸ்ட் 7 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...