follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP2தேவைப்பட்டால் அவுஸ்திரேலிய குடியுரிமையை இழக்கவும் தயார் - திலகரத்ன டில்ஷான்

தேவைப்பட்டால் அவுஸ்திரேலிய குடியுரிமையை இழக்கவும் தயார் – திலகரத்ன டில்ஷான்

Published on

சஜித் பிரேமதாசவின் வேலைத்திட்டம் மற்றும் தொலைநோக்குப் பார்வையை மிகவும் உன்னிப்பாக ஆராய்ந்த பின்னர் அவருக்கு ஆதரவளிக்க தீர்மானித்ததாக முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் திலகரத்ன டில்ஷான் கூறுகிறார்.

ஐக்கிய மக்கள் சக்தி இன்று (20) ஏற்பாடு செய்திருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவரைச் சுற்றி நல்ல அணி இருப்பதாகவும், ஒரு நல்ல தலைவருக்கு நல்ல அணி தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

தாம் இரட்டைக் குடியுரிமை பெற்றவர் எனவும், நாடாளுமன்றம் செல்ல வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தேவை ஏற்பட்டால் தனது குடியுரிமையை விலக்கிக் கொள்ளத் தயார் எனவும், விளையாட்டு அமைச்சர் பதவியையோ அல்லது எதையோ எதிர்பார்த்து எதிர்க்கட்சியில் இணையவில்லை எனவும் திலகரத்ன டில்ஷான் மேலும் தெரிவித்துள்ளார்.

“பெரிய தியாகம் செய்து விட்டேன்.. என் பிள்ளைகள் அனைவரும் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்கள்.. கட்சி வேறுபாடின்றி நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று என் குழந்தைகளை விட்டுவிட்டுத்தான் வந்தேன்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

லிட்ரோ மேன்பவர் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையத்தில் சுமார் 250 மேன்பவர் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது சம்பளத்தை உயர்த்தவில்லை என்றும், அரசாங்கம்...

பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை

பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த...

இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் சனியன்று மீண்டும் ஆரம்பம்

இந்திய பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரை மீண்டும் மே 17 ஆம் திகதி தொடங்க இந்திய கிரிக்கெட்...