கனடாவின் புதிய பொதுப் பாதுகாப்பு அமைச்சராக இலங்கைத் தமிழரான கெரி ஆனந்தசங்கரி பதவியேற்றுள்ளார்.
பொதுப் பாதுகாப்பு அமைச்சராக, கெரி ஆனந்தசங்கரி, மக்கள் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு, அவசர நிலை மேலாண்மை, குடியுரிமை மற்றும் எல்லை பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கியப் பொறுப்புகளுக்கு தலைமை தாங்குவார்.
தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு, மே 13, 2025 அன்று அறிவிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க அமைச்சரவை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக ஆனந்தசங்கரியின் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் கெரி ஆனந்தசங்கரி, கனடாவின் நீதி அமைச்சராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.