எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மறைந்த ஜனாதிபதி வேட்பாளர் மொஹமட் ஐத்ரூஸ் இல்லியாஸுக்குப் பதிலாக வேறு ஒருவரை நியமிக்க மூன்று நாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.
முகமட் ஐத்ரூஸ் இல்லியாஸ் இறந்துவிட்டதாக இறப்புச் சான்றிதழைச் சமர்ப்பித்து, இல்லியாஸ் சார்பாக வேட்பு மனுவில் கையெழுத்திட்டவர், வேறு ஒருவரைப் பரிந்துரைக்க முடியும் என்று கூறினார்.
எவ்வாறாயினும், மொஹமட் ஐத்ரூஸ் இல்லியாஸின் வாக்காளர் அடையாளமும் பெயரும் வாக்குச் சீட்டில் அச்சிடப்பட்டுள்ளதால், அதில் மாற்றம் ஏற்படாது என தலைவர் தெரிவித்தார்.
இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடவிருந்த முகமட் ஐத்ரூஸ் இல்யாஸ் நேற்று முன்தினம் (22) இரவு மாரடைப்பு காரணமாக காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 79.
இதன்படி, 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 38 என ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.