ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய தபால்மூல வாக்காளர்களுக்கு முகவரியிடப்பட்ட பதிவு செய்யப்பட்ட தபால் மூல வாக்குகள் அடங்கிய பாதுகாக்கப்பட்ட பொதிகளை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (26) ஆரம்பமாகவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகம் எதிர்வரும் செப்டெம்பர் 03ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகத்திற்கான விசேட தினமாக செப்டெம்பர் 8ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையையும் இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.