follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP2மூன்ஃபிஷின் மரணத்தினால் உக்ரேனிய விமானப்படை தளபதி பதவி நீக்கம்

மூன்ஃபிஷின் மரணத்தினால் உக்ரேனிய விமானப்படை தளபதி பதவி நீக்கம்

Published on

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அந்நாட்டின் விமானப்படைத் தளபதி மைகோலா ஓலேஷ்சுக்கை பதவி நீக்கம் செய்துள்ளார்.

அண்மையில் அமெரிக்காவினால் நாட்டிற்கு வழங்கப்பட்ட F-16 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானதாலும், அந்நாட்டின் முன்னணி விமானி ஒருவர் உயிரிழந்ததாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைனின் மிக மோசமான சமீபத்திய வான்வழித் தாக்குதலுக்கு ரஷ்யா பதிலடி கொடுக்கும் போது விமானம் விபத்துக்குள்ளானது.

இது “மூன்ஃபிஷ்” (Moonfish) என்று அழைக்கப்படும் ஓலெஸ்கி மெஸ் என்ற விமானியால் இயக்கப்பட்டது.

F-16 போர் விமானங்களை பறக்க பயிற்சி பெற்ற சில உக்ரேனிய விமானிகளில் ஒலெஸ்கியும் ஒருவர்.

எனவே, அவரது மறைவு நாட்டுக்கு பெரும் இழப்பாக கருதப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிகரிக்கும் போர் பதற்றம் – இந்தியாவில் 32 விமான நிலையங்களுக்கு பூட்டு

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதனால் இந்திய வான்மண்டலங்களில் கட்டுப்பாடுகளை விதித்து விமான சேவைகளை ஒழுங்குப்படுத்தி...

டேன் பிரியசாத் கொலை வழக்கு – சந்தேக நபர்கள் அடையாளம்

டேன் பிரியசாத் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள், இன்று (09)...

மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் வருகை

மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...