follow the truth

follow the truth

October, 12, 2024
HomeTOP2போலியோ பாதிப்பில் குழந்தைகள் : கருணை காட்டாத இஸ்ரேல்

போலியோ பாதிப்பில் குழந்தைகள் : கருணை காட்டாத இஸ்ரேல்

Published on

பலஸ்தீனம் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. போர் காரணமாக காசாவில் குழந்தைகள் போலியோ பாதிப்பு அச்சத்தில் இருக்கின்றனர். இந்நிலையில், போருக்கு நடுவே ஐநா போலியோ தடுப்பூசியை போடும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

கடந்த 2007ம் ஆண்டு முதல் பலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும் பலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் திகதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் 1500 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதுதான் தற்போது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கான தொடக்கப்புள்ளி. ஹமாஸை அழிப்பதே முதன்மையான நோக்கம் என்று முழக்கமிட்டு -இஸ்ரேல் இந்த போரை தொடங்கியது.

போரில் இதுவரை 40,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதமாகும். அதேபோல 3.7% மக்கள் அதாவது 86,000 பேர் போரால் படுகாயமடைந்துள்ளனர். 23 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர். பசி, பட்டினியும், தொற்று நோயும் அவர்களை துரத்திக்கொண்டே இருக்கிறது. காசா பகுதி ஏறத்தாழ தரைமட்டமாகிவிட்டது.

இந்த போரில் ஹிஸ்புல்லா அமைப்பு, பலஸ்தீனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது. அதாவது பலஸ்தீனத்திற்காக எப்படி அந்நாட்டின் ஹமாஸ் போராடி வருகிறதோ, அதுபோல லெபனானிலிருந்து இயங்கி வரும் அமைப்புதான் ஹிஸ்புல்லா. இது சுதந்திர பாலஸ்தீன கொள்கையை ஆதரித்து வருகிறது. எனவே ஹமாஸுடன் சேர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட்டு வந்தது.

இதற்கு பதிலடி கொடுக்க லெபனான் மீது இஸ்ரேல் திடீர் வான்வழித் தாக்குதலை நடத்த, இதில் ஹில்புல்லா அமைப்பின் கமாண்டர் ஃபுவாட் ஷுக்ர் சில நாட்களுக்கு முன்னர் பலியானார். அடுத்த நாள் ஈரான் நாட்டில் வைத்து, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் போட்டு தள்ளியது.

இந்த இரண்டு கொலைகளும் மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது. குறிப்பாக ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF) மீது கடும் கோபத்தில் இருக்கிறது. எனவே எப்போது வேண்டுமானாலும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்கா எச்சரித்திருந்தது.

சூழல் இப்படி இருக்கையில் காசாவில் மீண்டும் போலியோ அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. அதாவது போர் தொடங்கியதிலிருந்து 90% காசா மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இந்த மக்களுக்கு உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்டவை கிடைக்கவில்லை. எனவே தொற்று நோய்கள் அதிகரித்துள்ளன. மறுபுறம் காசா குழந்தைகளிடையே போலியோ நோய் பரவல் தொடங்கியுள்ளதாக அமெரிக்கா, ஐநா கூறியுள்ளது.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் காசாவில் போலியோ நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது, போர் காரணமாக தடுப்பூசி விநியோகம் நிறுத்தப்பட்டிருக்கிறது. எனவே, போலியோ நோய் மீண்டும் பரவியுள்ளது. மனிதாபிமானத்தின் அடிப்படையில் போர் நிறுத்தத்தை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று ஐநா பொதுச்செயலாளர் வலியுறுத்தியிருந்தார்.

இதனையடுத்து பல்வேறு பகுதிகளில் மூன்று நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் என இரு தரப்பும் முன்வந்திருக்கிறது. இந்த மூன்று நாட்களில் சுமார் 6.4 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்தை செலுத்தும் பணியை ஐநா தீவிரப்படுத்தி வருகிறது.

ஆனால், ஐநா நினைத்ததைவிட இது சற்று சிரமமான பணியாகவே இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இன்று ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 8 பேர் பலியாகியுள்ளனர். இந்த முகாமில் உள்ள குழந்தைகளுக்கும் ஐநா தடுப்பூசி செலுத்த வேண்டும். தற்போது வரை 6.4 லட்சத்தில் பாதி குழந்தைகளுக்கு ஐநா தடுப்பூசி செலுத்தியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2 மணி நேரமாக வானில் வட்டமடித்த விமானம் – பாதுகாப்பாக தரையிறக்கம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 144 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் தொழில் நுட்பகோளாறு காரணமாக, சுமார் 2...

ஜப்பான் அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2024-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானிய அமைப்பான நிஹோன் ஹிடாங்க்யோவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதங்கள் இல்லாத உலகை...

தொழில்நுட்பக் கோளாறு – மீண்டும் கொழும்பிற்கு திரும்பிய ஸ்ரீலங்கன் விமானம்

கொழும்பில் இருந்து ரியாத் நோக்கிச் சென்ற UL 265 என்ற விமானம், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கை...