ஜனாதிபதி வேட்பாளர் விவாத தொடரின் மூன்றாவதும் இறுதியுமான கட்டம் இன்று நடைபெறவுள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பிற்பகல் 03.00 மணி முதல் 05.00 மணி வரை நடைபெறவுள்ளதாக மார்ச் 12 இயக்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 06 பேர் ஏற்கனவே தமது வருகையை உறுதிப்படுத்தியுள்ளதாக PAFRAL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் மார்ச் 12 இயக்கத்தின் அழைப்பாளருமான ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்திருந்தார்.
இந்த விவாதத்தின் முதல் கட்டம் கடந்த 07ம் திகதி தொடங்கியது.
அன்றைய தினம், நான்கு ஜனாதிபதி வேட்பாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர், ஆனால் அவர்களில் மூன்று பேர் பங்கேற்கவில்லை.
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரும் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் ஆகியோர் விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை.
மார்ச் 12 இயக்கம் விவாதத்தில் கலந்து கொள்வதாக முன்பே உறுதி செய்திருந்தும் அவர்கள் விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி அன்றைய தினம் சர்வசன அதிகாரக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவை இணைத்து விவாதம் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.