follow the truth

follow the truth

October, 12, 2024
Homeஉலகம்காஸா முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்.. 40 அப்பாவி பொதுமக்கள் பலி

காஸா முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்.. 40 அப்பாவி பொதுமக்கள் பலி

Published on

 இடையே போர் தொடரும் நிலையில், தெற்கு காசாவில் புலம் பெயர்ந்த பலஸ்தீனியர்கள் தங்கியிருந்த கூடார முகாம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 60 பேர் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் பல மாதங்களாகத் தொடர்ந்து வருகிறது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது என்னவோ காசா பகுதியில் வசிக்கும் மக்கள் தான்.

காசா மீது இடைவிடாமல் நடத்தப்படும் தாக்குதல்களால் அங்கு வாழும் பலஸ்தீன மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே காசாவின் கான் யூனிஸ் அடுத்துள்ள அல்-மவாசி பகுதியில் அமைந்துள்ள கூடாரங்களைக் குறிவைத்து இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக காசாவின் சிவில் டிஃபென்ஸ் தெரிவித்துள்ளது.

காசா பகுதியில் ஒவ்வொரு நகரத்தின் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. அங்கு மக்கள் அதிகம் வாழும் கான் யூனிஸ் மற்றும் அருகிலுள்ள ரஃபாவில் இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்த நிலையில், இஸ்ரேல் ராணுவம் கடலோரப் பகுதியைப் பாதுகாப்பான பகுதியாக அறிவித்து இருந்தது. அதாவது அந்த பகுதியில் தாக்குதல் நடத்த மாட்டோம் என அறிவித்து இருந்தது. இதன் காரணமாகவே இந்த அல்-மவாசி பகுதியில் பாலஸ்தீன மக்கள் அதிகம் முகாமிடத் தொடங்கினர்.

இந்தச் சூழலில் தான் அங்கும் தாக்குதல் நடந்துள்ளது. இன்று காலை இஸ்ரேல் உளவு திடீரென தலைக்கு மேல் பறந்ததாகத் தெரிவிக்கும் பாலஸ்தீன மக்கள், திடீரென இந்தத் தாக்குதல் நடந்ததாகக் கூறுகிறார்கள். தாக்குதலைத் தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் இப்போது துரிதமாக நடந்து வருகிறது. முகாமில் சில இடங்களில் சுமார் 9 மீட்டர் அதாவது 30 அடி வரை கூட பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதாகக் காசா அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தாக்குதலில் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 60 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மக்கள் தங்கி இருந்த முகாம் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ள காசா நிர்வாக அதிகாரிகள், இந்த போரின் மிகக் கொடூரமான படுகொலைகளில் ஒன்று என்று இதைக் குறிப்பிட்டுள்ளனர். கூடாரங்கள் முழுமையாகப் பற்றி எரிந்த நிலையில், உடல்களை மீட்பதிலேயே சிரமம் நிலவுவதாக அதிகாரிகள் கூறினர்.

அதேநேரம் இஸ்ரேல் தரப்பு இதற்கு வேறு விதமான விளக்கத்தைக் கொடுத்துள்ளது. அதாவது கான் யூனிஸில் தாக்குதலுக்கு அப்பாற்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட இடங்களில் இருந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் செயல்பட்டதாகவும் அவர்களைக் குறிவைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர். பாதுகாப்பு மண்டலத்தில் இருந்த இந்த பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழப்பதைத் தடுக்க இஸ்ரேல் தேவையான நடவடிக்கைகளை எடுத்ததாகவும் அந்நாட்டின் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. பாதுகாப்பு முகாம்களில் சரியாக எங்கே பயங்கரவாதிகள் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து தேவையான வெடி மருந்தைப் பயன்படுத்தியதாகவும் வான்வழி கண்காணிப்பு பணிகளும் மேற்கொண்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

அதேநேரம் இஸ்ரேலின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்துள்ள ஹமாஸ், தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் யாரும் இந்த பாதுகாப்பு மண்டலத்தில் தங்கவில்லை என்று கூறியுள்ளது. அப்பாவி மக்களைக் கொன்றுவிட்டு இஸ்ரேல் அதைச் சமாளிக்கவே இந்த காரணங்களைக் கூறுவதாகவும் ஹமாஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. மக்கள் இருக்கும் பகுதிகளில் இருக்க மாட்டோம் என்று பல முறை கூறிய பிறகும், திட்டமிட்டு இஸ்ரேல் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி மக்களைக் கொன்று வருகிறது என்று ஹமாஸ் தரப்பு கூறியுள்ளது.

இது தொடர்பாக காசாவின் சிவில் பாதுகாப்பு பிரிவின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “ஆரம்ப மதிப்பீடுகளை வைத்துப் பார்க்கும் போது குறிப்பிடத்தக்க அழிவு இங்கு ஏற்பட்டுள்ளது தெரிகிறது. பாதுகாப்பு மண்டலங்களில் மக்கள் பத்திரமாக இருக்கலாம் என்பதையே கேள்விக்குறியாக்குவதாக இந்தத் தாக்குதல் இருக்கிறது” என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2 மணி நேரமாக வானில் வட்டமடித்த விமானம் – பாதுகாப்பாக தரையிறக்கம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 144 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் தொழில் நுட்பகோளாறு காரணமாக, சுமார் 2...

ஜப்பான் அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2024-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானிய அமைப்பான நிஹோன் ஹிடாங்க்யோவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதங்கள் இல்லாத உலகை...

ஜப்பான் பாராளுமன்றம் கலைப்பு – 27ம் திகதி தேர்தல்

ஜப்பான் பாராளுமன்றத்தை கலைக்க அந்நாட்டின் புதிய பிரதமா் ஷிகெரு இஷிபா உத்தரவிட்டாா். புதிய பாராளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான தோ்தல் எதிர்வரும் 27ஆம்...