இரண்டு கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள் மற்றும் மின் சிகரெட்டுகளை நிரப்புவதற்கு பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் என்பன கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த பொருட்களை இலங்கைக்கு கொண்டு வந்த பயணி ஒருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் கொழும்பு – 13 பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-226 இல் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவரது பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 120,400 சிகரெட்டுகள் அடங்கிய 602 அட்டைப்பெட்டி சிகரெட்களைக் கண்டுபிடித்துள்ளனர்.